கலைப்புலி தாணு பிரமாண்டமாய் வெளியிடும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’!

2

பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் காலாபானி. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இளையராஜா இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் மலையாளப் படமான ‘மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்குகிறார். தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் கலைப்புலி தாணுவே வெளியிடுகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். எம்எஸ் ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார். ரோனி நபேல் இசையமைக்கிறார். ஆர்பி பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார். இதற்கு முன்பு மோகன்லால் படங்களான புலி முருகன், லூசிபர் ஆகியஇரு பிரமாண்ட வெற்றி படங்களுக்கும் இவர்தான் வசனங்களை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகமெங்கும் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு பிரமாண்டமாக வெளியிடுகிறார் .

இப்படத்தை பற்றி கலைப்புலி தாணு கூறுகையில், “சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான இந்த கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பைத் தருகிறது. அதை நானே மீண்டும் தமிழில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.