ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்ககீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

ருமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராம் இயக்கி உள்ளார்.

நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறுகையில், “தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது.

இந்த அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும். மகிழ்ச்சியையும் அளிக்கிறது,” என்றார்.

இதுகுறித்து படத்தின் நாயகன் நிவின் பாலி வெளியிட்டுள்ள பதிவு:

https://x.com/NivinOfficial/status/1804733723067474204?t=5CDktNf4LR6XwySa5_cIYQ&s=19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *