சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பெத்த பெருமாள் – பாண்டி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இதனால் வீட்டிலும், ஊரிலும் ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்கள், சாடைப் பேச்சுக்கள். 0ஆண்டியை மலடி என்று மாமியாரே திட்டுகிறார்.

குழந்தை இல்லாத குறையைக் காட்டி, தன் மகள் வயிற்றுப் பேத்தியை பெருமாளுக்கு கட்டி வைக்க முயற்சிக்கிறார் அம்மா.

ஒரு கட்டத்தில் தன் கணவனை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செய்ய வைக்கிறார் பாண்டி. பரிசோதனையில் பெத்தபெருமாளிடம்தான் பிரச்சினை என்று தெரிகிறது.
இதை கணவருக்குச் சொல்லாமல் அறிவியலின் உதவியுடன் கர்ப்பமாகி பிள்ளை பெற்றுக் கொள்கிறார் பாண்டி.

குழந்தைப் பிறந்த சில ஆண்டுகள் கழித்தே உண்மை பெருமாலுக்குத் தெரிகிறது.

இந்த உண்மையை பெருமாள் எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதுதான் முடிவு

குழந்தைப் பேறு இல்லாவிட்டால் அதற்குக் காரணம் பெண் மட்டும்தான் என்ற சமூகத்தின் பெரும்பான்மை மனப்பான்மையை அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள்.

பாண்டியாக நடித்திருக்கும் இஸ்மத் பானுவிடம் மிக இயல்பான நடிப்பைக் கான முடிகிறது. நம்மில் ஒருவராகவே தெரிகிறார்.

பெருமாளாக வரும் திரவ்வும் நல்ல தேர்வு.

ரமா, எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு படத்துக்கு பலம். ஆனால் நீள நீளமான காட்சிகள் சோதிக்கின்றன. எடுத்துக்கொண்ட விடயத்தை நேர்த்தியாகச் சொன்னதில் ஜெயிதிருக்கிறார் இயக்குநர் வேதமுத்து.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *