சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ந்தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, இன்னமும் சில அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதுவரை உலகம் முழுக்க ரூ 300 கோடிவரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ 152 கோடியை குவித்துள்ளது இந்தப் படம்.

அண்ணாத்த, 2021-ம் ஆண்டில் மிகப் பெரிய வசூல் குவித்த வெற்றிப்படம் என்று பாக்ஸ் ஆபீஸில் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த மிகப் பெரிய வெற்றிக்கு பரிசளிக்க விரும்பிய நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு திடீரென்று சென்றார். அங்கு சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். ரஜினியின் திடீர் வருகையால் சிவாவின் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர், மேலும் ரஜினிகாந்த், சிவாவின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வெற்றுி, அடுத்த படம் குறித்தெல்லாம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *