வியாழன் கிரகத்தின் வண்ணமயான புதிய தோற்றம் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த படம் வெளியானது!

 

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் ஏவியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய ரகசியங்களை உடைக்கும் விதமாக அந்தப் படங்கள் அமைந்தன. விண்மீன் திரள்களின் படங்களும் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது. இந்தநிலையில் இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்துக் காட்டும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதில் புவியின் வட, தென் துருங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா (வண்ணமயமான ஒளிக்கோலம்) வியாழன் கோளிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

Photos: NASA, ESA, CSA, Jupiter ERS Team

James Webb TelescopeJupiter planetNasaஜேம்ஸ் வெப்நாசாவியாழன் கிரகம்
Comments (0)
Add Comment