நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை!

சென்னை: சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 48 மணி நேரம் தீவிர சிகிச்சை அவருக்குத் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விவேக்குக்கு கடுமையான மாரடைப்பு என்பதால், ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்கள் குழு நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறுகையில், “நடிகர் விவேக், தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார். நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார். அவரது உடல் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என மருத்துவர்கள் தெரிவிகத்துள்ளனர்,” என்றார்.

நடிகர் விவேக் நேற்று தான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் விவேக்கின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் விசாரித்தார். அவர் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:

“உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன் விவேக். என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளுக்கும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம்பெற வேண்டும் விவேக்,” என்று கூறியுள்ளார்.

Actor VivekCardiac ArrestEcmo Treatmentஎக்மோ சிகிச்சைநடிகர் விவேக்மாரடைப்பு
Comments (0)
Add Comment