உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மரணம்

குருகிராம்: உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவும் அவருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அவரது மகன் மற்றும் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், முலாயம் சிங்கின் சகோதரர், அவரது மகன் உள்பட குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.

பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், அகிலேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முலாயம் சிங்கின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர். அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என இருவரும் உறுதி அளித்தனர். முலாயம் சிங் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். இதனை அவரது மகன் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

முலாயம் சிங் யாதவை மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Mulayam Singh YadavUtter Pradeshஉபிமுலாயம் சிங் யாதவ்
Comments (0)
Add Comment