டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டது.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு போலவே பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை மூன்று முறை டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Liquor ShopsTasmac Shopsடாஸ்மாக் கடைகள்
Comments (0)
Add Comment