பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ்க்குடிமகன் முன்னோட்டப் படம்!

 

ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.

பகிரி படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, லால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் திரைப்படத்தை லட்சுமி கிரியேசன்ஸ் சார்பில் ஹரிராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக்ராம் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியானது. இந்த நிலையில் தற்போது ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் சிறுமுன்னோட்டம் வெளியாகி உள்ளது. கீழ் சாதி என்று கூறி ஒதுக்கப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அமைப்பை எதிர்த்துப் போராடுவது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுமுன்னோட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த முன்னோட்டப்படம் வெளியாகி 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

படத்தின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/watch?v=gfpSbRacy1o

இந்த முன்னோட்டப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்!

தமிழ்க்குடிமகன் – திரைப்படக்குழுவினர் அனைவருக்கும் என் பேரன்பும் வாழ்த்துகளும்!” எனத் தெரிவித்துள்ளார்.

cheranTamilkudimagan teaserசேரன்தமிழ்க்குடிமகன் முன்னோட்டம்
Comments (0)
Add Comment