தமிழகத்தில் 27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி!

சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் மாண்வர் சேர்க்கைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Corona lockdownTasmac Shopsகொரோனா ஊரடங்குடாஸ்மாக் கடைகள்தமிழ் நாடு அரசு
Comments (0)
Add Comment