பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்… பாஜகவை பின்னுக்குத் தள்ளும் லாலுபிரசாத் கட்சி!

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.

இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி பின்தங்கி தற்போது பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பீகார் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை கிடைக்கும் என என்பதில் இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. பெரும்பான்மை விவகாரத்தில் முன்னும் பின்னுமாக தோன்றினாலும், பீகார் தேர்தலின் இறுதி முடிவுகளுக்காக நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.

இரவு 9 மணி நிலவரப்படி ராஷ்ட்ரீய ஜனதா தளம் மட்டும் 76 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக பா. ஜனதா கட்சி 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இன்னும் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ண வேண்டி இருப்பதால், தேர்தல் முடிவுகள் குறித்து கணிக்க முடியாத நிலையே உள்ளது.

BJP. Bihar ElectionsCongressRJDபாஜகபீகார் தேர்தல் முடிவுகள்ராஷ்ட்ரீய ஜனதா தளம்
Comments (0)
Add Comment