கொரோனா பாதித்த கமல் ஹாஸனை நலம் விசாரித்தார் ரஜினி!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் கடந்த 16-ந் தேதியன்று, மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமிக்க இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல் ஹாசன் அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் வட அமெரிக்க குழு நிர்வாகிகளை சிகாகோவில், கமல் ஹாசன் சந்தித்து பேசினார்.

அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. காய்ச்சலும் இருமலும் மேலும் அதிகரிக்கவே, கமல்ஹாசன் சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவரை தனிமைப்படுத்தி டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை கமல்ஹாசனே உறுதிப்படுத்தினார்.

நலம் விசரித்த ரஜினிகாந்த்
+
கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமல் ஹாசனிடம் தொலைபேசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Covid 19Kamal Haasanrajinikanthகமல் ஹாஸன்கொரோனாரஜினிகாந்த்
Comments (0)
Add Comment