அதானியைப் பாதுகாக்கிறது மோடி அரசு! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவரின் உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை அவர் வழங்கினார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் 2004-2014 அடங்கிய பத்தாண்டுகாலம் ஊழல்கள் நிறைந்தது. நாடு முழுவதும் அந்தப்பத்தாண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் மோடி பேச்சு திருப்தி அளிக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் பேச்சு திருப்தியளிக்கவில்லை. அதானி தனது நண்பர் இலையெனில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என பிரதமர் கூறியிருக்க வேண்டும். தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது,” என்றார்.

“அதானி விவகாரம் குறித்து நான் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை,” என மக்களவை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

Comments (0)
Add Comment