ராஜீவ் காந்தி 78வது பிறந்த நாள்: ராகுல், ப்ரியங்கா அஞ்சலி

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.

மிக இளம் வயதில் இந்தியாவின் பிரதமராகி, தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர் ராஜீவ் காந்தி. இன்று இந்தியாவில் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்டவர் ராஜீவ் காந்திதான்.

ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்,” என்று பதிவிட்டு ராஜீவ் காந்தி குறித்த ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Rahul GandhiRajiv Gandhi Birth Dayபிறந்த நாள் ராகுல் காந்திராஜீவ் காந்தி
Comments (0)
Add Comment