ஒருவழியாக இலங்கை அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் கோத்தபய!

 

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை போன்றவற்றை மக்கள் கைப்பற்றினர். இதை முன்கூட்டியே அறிந்து, நாட்டைவிட்டே ஓடினார் ராஜபக்சே. மாலத்தீவில் அவர் இரு தினங்கள் தங்கினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தவே, சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்படுகிறார்.

 

Gotabaya RajapaksaSri Lankaஇலங்கைகோத்தபய ராஜபக்சே
Comments (0)
Add Comment