தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கத்தின் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் 64 ரூபாய் குறைந்து 38,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 8 ரூபாய் விலை குறைந்து 4,752 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒருகிராம் 66 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. இது கடந்த சனிக்கிழமை விற்கப்பட்ட விலையாகும். கட்டி வெள்ளி விலையும் மாற்றமின்றி கிலோ 66,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Chennai Gold RateGold Rateசென்னையில் தங்கம் விலைதங்கம் விலை
Comments (0)
Add Comment