திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்ய முயற்சி! – முக ஸ்டாலின்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “நீட் தேர்வைப் பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் குளறுபடி ஏற்படுகிறது.

ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிடில் எதிர்க்கட்சித் தலைவராக நான் கேள்வி கேட்பேன். மாணவர்களுக்கு நீட் தேர்வு பலி பீடமாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவேன்,” என்றார்.

DMKElection 2021mk stalinNEETதிமுகதேர்தல் 2021நீட் தேர்வுமுக ஸ்டாலின்
Comments (0)
Add Comment