தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!

 

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,56,917 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 532 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4,207 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,40,180 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று மட்டும் புதிதாக 16848 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது,

Corona virusCovid 19Tamil Naduகொரோனா பரவல்தமிழகம்
Comments (0)
Add Comment