ஆபத்தான ஆரம்பம்!

மிழ் நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பணம் , உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றையும் தாண்டி, தமிழக மக்களின் மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகிறது. சின்னச் சின்ன அதிருப்திகள் இருந்தாலும் -குருமூர்திகளின் அளவீடுகளின்படி – ஆண்மையுள்ள இந்த அரசே தொடரட்டும் என்ற விருப்பம்தான், திமுகவை வரலாறு காணாத வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

முதல்வர் சொன்னதுபோல, பொறுப்பு ஏராளமாகக் கூடியிருக்கிறது. அத்துடன் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு கவலையும்…

அது, கோட்சேவின் வழித்தோன்றல்களான கொலைகாரக் கூட்டம் பாஜகவுக்கு ஆங்காங்கே வார்டு உறுப்பினர் பதவி கிடைத்திருப்பது. கட்சியைத் தாண்டி அவர்கள் தங்கள் சொந்த செல்வாக்கில் வென்றிருந்தாலும், அதை பாஜக இனி எப்படி முன்னிலைப்படுத்தப் போகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என எதிலும் அக்கட்சி பெரும்பான்மையையோ, அதிக இடங்களையோ பெறவில்லை என்றாலும், சில நகராட்சிகளில் ஓரிரு இடங்களைப் பெற்றுள்ளது, தமிழக அரசியலில் கரும்புள்ளி மாதிரிதான். காரணம் அரசியல், அதிகாரம் என அனைத்திலும் சுத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டிய தீய சக்தி இந்த சங்கி கும்பல்.

இந்த மதவெறி கும்பல், தங்களுக்குக் கிடைத்த செருப்படி தோல்விகளை மழுப்பி மறைத்து, பெற்ற சிறு வெற்றிகளை பூதாகரமாக விளம்பரப்படுத்தி, தங்களை முன்னிலை எதிர்க்கட்சியாகக் காட்டிக் கொள்ளப் பார்ப்பார்கள். இந்த காவி ஆடுகள் இனி கத்திக் கொண்டே இருக்கும், திராவிடம், தமிழ் உணர்வு போன்றவற்றில் அவ்வளவாக நாட்டம் இல்லாத பொதுவான வாக்காளர்களின் கவனம் பெற. கர்நாடகம் காவியாகி கண்றாவியாது இப்படித்தான்.

தமிழ் நாட்டின் அனைத்து மட்டங்களிலும் ஆட்சி செலுத்தும் திமுக மட்டும் அல்ல…. எம் ஜி ஆர் என்ற மக்கள் தலைவரால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கத்தை, தமிழ் இனத்தின் எதிரியான மோடியின் காலில் கிடத்துவதில் யார் கில்லாடி என போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ், சசிகலா கோஷ்டிகளால் ஆளப்படும் எதிர்க்கட்சியான அஇஅதிமுகவும், பாஜக என்ற கேவலத்தை வளர விடாமல் பாரர்த்துக் கொள்ள வேண்டும்.

பணம், விளம்பரம், சலுகைகளுக்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போய், ‘பாஜகதான் 3வது பெரிய கட்சி’ என கூசாமல் புளுகுவதை தமிழ் நாட்டு ஊடகங்கள் தயவு செய்து நிறுத்த வேண்டும். பாஜக என்பது விஷம்… சாதாரண விஷம் அல்ல, இந்த மனித குலத்தையே அழிக்கவும் தயங்காத ஆலகால விஷம். அது துளிர்க்கும்போதே அழித்தொழிக்கப்பட வேண்டும்!

எஸ். சங்கர்

BJPTamil Nadu Local Body Electionஉள்ளாட்சி தேர்தல்பாஜக
Comments (0)
Add Comment