திடீர் உடல் நலக்குறைவு…. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி

 சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

லேசான நெஞ்சுவலி காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்கள் விரைவில் வெளிவர உள்ள நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Actor VikramHospitalisedஉடல் நிலைநடிகர் விக்ரம்
Comments (0)
Add Comment